Search This Blog n

10 August 2013

குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் !!!


தானாக உடலில் தீப்பற்றி எரியும் நோயினால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரஸ்கனி கிராமத்தை சேர்ந்த கர்ணன், ராஜேஸ்வரி தம்பதிகளின் மகன் ராகுல்.
இக்குழந்தை பிறந்து இரண்டரை மாதங்களில் இதுவரை 4 முறை தானாக தீப்பற்றியுள்ளது.
இக்குழந்தையின் இந்த நிலையினால் மூட நம்பிக்கை கொண்ட அக்கிராம மக்கள், இவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
ஸ்பான்டின் க்யூமன் கம்பன்ஷன் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட இக்குழந்தை தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், உலகம் முழுவதும் 300 ஆண்டுகளில் 200 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான முழு தீர்வு இல்லை என்ற போதிலும் குழுந்தையின் திடத்தன்மையை அதிகரிக்க சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் இக்குழந்தையை, 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவக்குழுவினர் சிகிச்சையளித்து வருகின்றனர்

0 கருத்துகள்:

Post a Comment