Search This Blog n

06 August 2013

ஊடுருவிய 270 பாகிஸ்தான் தீவிரவாதிகள்: 42 முகாம்களில் சிறப்பு பயிற்சி


உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய உள்துறை இணை மந்திரி ஆர்.பி.என்.சிங் கூறியதாவது:-
பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. தூண்டுதலால் கடந்த 20 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் தீவிரவாத அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது.
பாகிஸ்தானில் உள்ள 42 தீவிரவாத பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்றவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
2000 - 2012 ஆண்டுகளுக்கிடையே இந்திய எல்லைக்குள் ஊடுருவ சுமார் ஆயிரம் முறை பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயற்சித்துள்ளனர். இவர்களில் 160 பேர் இந்திய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். எதிர் தாக்குதலுக்கு பயந்த 570 தீவிரவாதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் திரும்பி ஓடிவிட்டனர்.
எனினும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் 270 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இவர்களில் 2010ம் ஆண்டு 55 பேரும், 2011ம் ஆண்டு 52 பேரும், 2012ம் ஆண்டு 121 பேரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்

0 கருத்துகள்:

Post a Comment