தெலுங்கானா தனி மாநிலமாக உருவாகியதால் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வன்முறைகள் வெடித்துள்ளன.
தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எஞ்சி ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருகின்றனர்.
இதனால் எஞ்சிய ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. குறிப்பாக ராயலசீமா பகுதியில் பொதுமக்கள் கொந்தளிப்புடன் இருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியின் கோட்டையாக கருதப்படுகிற கடப்பாவில் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தியும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இந்திரா காந்தி சிலை மீது பெட்ரோல் ஊற்றி எரித்து அப்புறப்படுத்தினர். மேலும் கடப்பாரை, சம்மட்டியால் ராஜிவ் காந்தி சிலையை உடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சித்தூரில் சோனியாவின் உருவ பொம்மையை கீழே போட்டு செருப்புக் காலில் மிதித்தும் செருப்பைக் கழற்றி அடித்தும் தங்களது கோபத்தை பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment