Search This Blog n

13 August 2013

வெடிகுண்டு மிரட்டல்! கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு!


தமிழ்நாட்டில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலால் வெடிகுண்டு நிபுணர்கள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு 12 மணிக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பில் பேசியவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடி குண்டு வைத்து இருப்பதாகவும், சிறிது நேரத்தில் அது வெடித்து சிதரும் என்று கூறிவிட்டு அழைப்பினை துண்டித்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு உடனடியாக தவகல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு பிரிவு இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொலிசார் மோப்ப நாய்கள், மற்றும் வெடி குண்டு கண்டு பிடிக்கும் கருவிகளுடன் பேருந்து நிலையத்தின் உள்ளே தீவிர சோதனை நடத்தினர்.
அதிகாலை 5 மணி வரை நீடித்த சோதனையில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதனால் மர்ம நபர் பேசிய போன் நம்பரை வைத்து விசாரித்தபோது, வட பழனியில் உள்ள குலசேகர பெருமாள் கோவில் அர்ச்சகர் முருகானந்தத்துக்கு சொந்தமான கைப்பேசி நம்பர் என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, முருகானந்தத்தை பிடித்து விசாரித்த போது, 15 நாள் முன்பு தனது கைபேசி தொலைந்து விட்டதாக கூறியுள்ளார்.
இருப்பினும் அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

0 கருத்துகள்:

Post a Comment