இந்தியா ஒரு கம்ப்யூட்டர் எனில் காங்கிரஸ் தான் அதில் பொருத்தப்பட்டிருக்கும் இயல்பான புரோகிராம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள் தொடர்பில் காங்கிரஸ் நடத்தும் பயிற்சிப் பட்டறை ஒன்றிற்காக வெவ்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 300 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் சிறந்த பண்புகளின் அடிப்படைக் கூறுகளாக இருப்பது காங்கிரஸ் தான். எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் மீது சுமத்தும் அவதூறுகளுக்கு ஆத்திரத்துடன் பதில் அளிக்க முற்படக் கூடாது. கோபமும், ஆவேசமும் எமக்கு பொருத்தமனாதல்ல. அதற்காக பொறுமையுடன் அமைதியாகவும் இருக்கக் கூடாது. உடனடியாக எமது பதில் நடவடிக்கையை மேற்கொண்டுவிட வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
Post a Comment