ஆந்திர மாநிலத்தில் மந்திரி சிரஞ்சீவியை காணவில்லை என்று சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலமானது இரண்டாக பிரிந்து தனி தெலுங்கானா மாநிலமாக உதயமாகியுள்ளது.
ஆனால் ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கும் விவகாரத்தில் ஆந்திராவை சேர்ந்த மத்திய மந்திரி சிரஞ்சீவி வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை.
இது ஒன்றுபட்ட ஆந்திர ஆர்வலர்கள் இடையே திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அவர்கள் பீமாவரம் என்ற இடத்தில் ‘மந்திரி சிரஞ்சீவியை காணவில்லை’ என்ற வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகளை சுவர்களில் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சுவரொட்டியானது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பீமாவரத்தில் நடுரோட்டில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்தி நூதன போராட்டத்திலும் ஈடுபட்டதும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment