பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
தென் மாநிலங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளதை அடுத்து கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளன.
தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி தென் மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தக் கூடும் என்று, மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
கடலோரத்தில் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம், மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இரு அணுமின் நிலையங்களை சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு படகுகள் செல்லக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மீறி படகுகள் சென்றால், படகின் உரிமையாளர் மற்றும் படகு ஓட்டுனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் படகுகளை தீவிரமாக கண்காணிக்கும் முயற்சியில் மீன்வளத்துறை இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment