ராஜஸ்தானில் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கொய்யாப்பழங்களைத் திருடிய குற்றத்திற்காக 6 வயது சிறுமியைக் கைது செய்யச் சொல்லி வற்புறுத்திய வயதான தம்பதிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான், கோத்ரா மாவட்டத்தில் உள்ள பிரகதி நகரில் வாழ்ந்து வரும் வயதான தம்பதிகள் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.
சமீப காலமாக அவர்களது தோட்டத்தில் உள்ள மரங்களில் இருந்து கொய்யாப் பழங்கள் மாயமாகி வந்தன.
ஒருநாள் 6 வயது சிறுமி ஒருவர் சுவர் ஏறிக் குதித்து தோட்டத்திற்குள் புகுந்ததைக் கண்டனர் அவர்கள் உடனடியாக ஓடிச் சென்று அச்சிறுமியைக் கையும் களவுமாக கொய்யாப் பழக்களோடு பிடித்து விட்டனர்.
உடனடியாக அச்சிறுமியின் வீட்டைச் சோதனையிட்ட அவர்கள் அங்கிருந்து மற்றொரு கொய்யாவைக் கைப்பற்றியுள்ளனர்.
பின்பு அச்சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவள் மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி வற்புறுத்தினர்.
7 வயதுக்கு குறைவான குழந்தைகளை கைது செய்ய இயலாது என எவ்வளவோ பொலிசார் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்க மறுத்து பிடிவாதம் பிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஒருவழியாக அச்சிருமியை அவர்களிடமிருந்து காப்பாற்றிய பொலிசார் அவளது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்
0 கருத்துகள்:
Post a Comment