இந்தியா முழுவதும் 67வது சுதந்திர தின விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டின் 67 வது சுதந்திர விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு தனது சுதந்திர தின உரையை வழங்கினார்.
இன்று காலை ராஜ்காட்டிற்கு சென்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் 07.30 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பிரதமர் உரை
இந்தியாவை வேலை வாய்ப்பு நிறைந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு நிறைவேறி வருகிறது.
உணவு பாதுகாப்பு மசோதா மூலம் நாட்டின் 75 சதவிகித மக்கள் பயன்பெற முடியும் என்பதால், மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்.
பொருளாதாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சமீப காலமாக உலக பொருளாதாரத்தில் நெருக்கடிகள் இருந்தும், கடந்த 9 ஆண்டுகளில் வளர்ச்சியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.
உத்தர்காண்டில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவு பெரும் கவலை அளிக்கிறது. உத்தர்காண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும். உத்தர்காண்டில் ராணுவ வீரர்கள் சிறப்பான மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
மும்பையில் சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் தீப்பிடித்து எரிந்ததில் 18 வீரர்கள் பலியான சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. பீகார் மதிய உணவு போன்ற துயரம் மீண்டும் நிகழக்கூடாது.
எல்லையில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டுடன் நடந்தால்தான் பேச்சுவார்த்தை நடைபெறும்.
எல்லை பகுதியில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் நாடு தடுக்க வேண்டும்.
மாவோயிஸ்டுகளின் போராட்டத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஜனநாயகப் பாதைக்கு திரும்ப வேண்டியது இப்போது அவசியம் என்று தெரிவித்துள்ளார்
{புகைபடங்கள்,}
0 கருத்துகள்:
Post a Comment