பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 இந்திய ராணுவ வீரர்களுள் ஒருவரின் மனைவி தனக்கு நஷ்ட ஈடாக பணம் வேண்டாம் அதற்கு பதிலாக குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று பீகார் மாநில அரசு அறிவித்திருந்தது.
இது குறித்து பாட்னாவில் உள்ள உயிரிழந்த வீரர்களில் ஒருவரான விஜய் ராயின் மனைவியுமான புஷ்பா ராய் கூறுகையில், 10 லட்சம் பணத்தை நஷ்ட ஈடாக கொடுத்தால் எனது கணவர் திரும்ப வந்துவிடுவாரா? இந்திய அரசு கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுப்பதற்கு பதிலாக அவர்களை கொன்றவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்படுகிறார்கள், தலை துண்டிக்கப்படுகிறார்கள். இவற்றுக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இன்னும் எவ்வளவு காலம் தான் பாகிஸ்தானின் இதுபோன்ற தாக்குதல்களை பொறுக்க முடியும்.? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சாப்ராவை சேர்ந்த உயிரிழந்த மற்றொரு வீரரான நாயக் பிரேம்நாத் சிங்கின் உறவினர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
0 கருத்துகள்:
Post a Comment