இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரம் குறித்து மீண்டும் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
இயக்குனர் சேரனின் இரண்டாவது மகள் தாமினி (20). இவரும் சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில், காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் தனது தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாமினி புகார் அளித்திருந்தார்.
இதற்கிடையில், தாமினியை மீட்டு ஒப்படைக்கும்படி சந்துருவின் தாய் ஈஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்து வழக்கு விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தாமினியின் இணைய தள முகவரியை பயன்படுத்தி மோசடி செய்ததாக சந்துரு மீது பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்வதற்காக இயக்குனர் சேரன் பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் சிவக்குமாரை சந்தித்து பேசியுள்ளார்.
மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதி மொழியை தொடர்ந்து சேரன் வீடு திரும்பியுள்ளார்
0 கருத்துகள்:
Post a Comment