உத்தரபிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த 2 பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு வேளையில் குளியலறைக்கு சென்றுள்ளார்.
அதே வீட்டின் மற்றொரு பகுதியில் வசிக்கும் 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அறைக்குள் வைத்து அப்பெண்ணை 2 பேரும் விடிய, விடிய மாறி, மாறி கற்பழித்துவிட்டு, நடந்ததை வெளியில் கூறியினால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தை அந்த பெண், தனது குடும்பத்தாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.
மருத்துவ பரிசோதனையில் அப்பெண் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் கொத்வாலி நகர் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் மணிஷ்குமார், அமித் ஆகிய 2 கான்ஸ்டபிள்களையும் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்
0 கருத்துகள்:
Post a Comment