Search This Blog n

05 August 2013

தற்கொலை செய்து கொள்ள நினைத்தவருக்கு கிடைத்த இங்கிலாந்தின் 'வுமன் ஆப் தி' இயர் விருது




தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்த பெண்ணுக்கு இங்கிலாந்தின் 'வுமன் ஆப் தி' இயர் விருது கிடைத்துள்ளது.
கோவையை பிறப்பிடமாக கொண்டவர் விஜயலட்சுமி. இவர் பொறியியல் படிக்கும் போது வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான இளம் வயதில் கணவர் திடீர் விபத்தில் இறந்ததால் வாழ்கையின் வெறுமையானது தற்கொலைக்கு தூண்டியுள்ளது, ஆனால் குழந்தைகளுக்காக வாழ வேண்டும் என்ற மன உறுதி பிறந்தது.
இதனைத் தொடர்ந்து வங்கியில் வங்கியில், ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்று  சிறிய மென்பொருள் நிறுவனத்தை 12 ஊழியர்களுடன்  கணவர் வீட்டிலேயே ஆரம்பித்தார். கடின உழைப்பால் 400 ஊழியர்களுடன், மதுரை, டில்லி, பெங்களூரு, ஐதராபாத் என நான்கு கிளைகளாக வளர்ந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், கிராமத்து பொறியியல் மாணவர்கள் கணினி தொடர்பாக படிக்கின்றனரே தவிர தொழில் ரீதியான திறனை வளர்க்காததால் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பதில்லை.
எனவே மென்பொருள் துறையில் பெற்ற நன்மைகளுக்கு பிரதிபலனாக, 'வெப் டெவலப்பிங்’ பயிற்சியை இலவசமாக தந்து, “மைக்ரோசாப்ட்’ துணையுடன், இணையதள தேர்வு நடத்துகிறேன்.
இத்தேர்வு முடிவுகள், மைக்ரோசாப்ட்டின் இணையதளத்திலேயே வெளிவருவதால், வென்றவர்களுக்கு உலகின் முக்கிய எம்.என்.சி., நிறுவனங்களில், லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆண்டிற்கு 200 கிராம மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறேன். இதுவரை யாரும் தோல்வி அடையவில்லை.
மேலும் விதவை பெண்களுக்கு கணினி பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி, மன உறுதியை வளர்க்க கவுன்சிலிங் போன்றவற்றை இலவசமாக வழங்கி, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறேன்.
மென்பொருள் துறையில் வெற்றியடைந்ததற்காக சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதை மத்திய, மாநில அரசிடமிருந்தும், இங்கிலாந்தின் “விமன் ஆப் தி இயர்’ விருதும் பெற்றிருக்கிறேன் என பெருமிதத்தோடு கூறுகிறார்
 

0 கருத்துகள்:

Post a Comment