Search This Blog n

15 August 2013

காதலுருடன் 20 கிலோ நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிய !


 
பாகிஸ்தான் காதலருடன் 20 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியோடிய இந்தியப் பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய பெண்மணி ஒருவர் தனது தாயாரின் 20 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு பாகிஸ்தான் காதலுருடன் தப்பித்துச் சென்றுள்ளார்.
துபாயில் வசித்து வரும் இந்திய பெண்மணி ஷார்ஜா 20 கிலோ நகைகளுடன் தாயகம் திரும்ப திட்டமிட்டார், இதனால் விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் அனுமதி பெறுவதற்காக தனது இளம்வயது மகளுடன் ஷார்ஜா விமான நிலையத்திற்கு வாடகை காரில் வந்தார்.
முதலில் அதிகாரிகளிடம் பேசிவிட்டு நகைகளை கொண்டு செல்லலாம் என நினைத்த அவர், மகளின் பொறுப்பில் நகைகளை ஒப்படைத்துவிட்டு காரிலேயே அமர்ந்திருக்கும்படி கூறிவிட்டு விமான நிலையத்திற்குள் சென்றார்.
அதிகாரிகளிடம் பேசிவிட்டு வெளியே வந்து பார்த்த அவர், மகள் அமர்ந்திருந்த கார் நகைகளுடன் மாயமாகி விட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தனது மகளை 20 கிலோ தங்க நகைகளுடன் யாரோ கடத்திச் சென்று விட்டதாக பொலிசில் புகார் அளித்தார்.
இது குறித்து நடைபெற்ற விசாரணையில், மற்றொரு விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்ல முயன்ற அந்த இந்திய பெண்ணை பொலிசார் சில மணி நேரங்களில் கைது செய்தனர்.
அவளிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, 'ஷார்ஜாவில் வசிக்கும் பாகிஸ்தான் இளைஞர் ஒருவரை உயிருக்குயிராக காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் நகைகளை தன்னுடைய காதலனிடம் ஒப்படைத்திருப்பதாகவும், நகைகளுக்கான அனுமதியை பெற்ற பின்பு நான் பாகிஸ்தான் வருகிறேன். நீ முதலில் பாகிஸ்தானில் உள்ள என் வீட்டிற்கு சென்று அங்கேயே தங்கியிரு என்று காதலன் கூறியதால் பாகிஸ்தானுக்கு செல்கிறேன் என கூறியுள்ளார்.
இதற்கிடையில் தன்னுடைய மகள் நகைகளை திருடிவிட்டதாக ஷார்ஜா புகார் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் காதலனுடன் அந்த இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்
 

0 கருத்துகள்:

Post a Comment