Search This Blog n

04 August 2013

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது


சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (03) கைது செய்துள்ளனர்.
அத்துடன், மீனவர்கள் பயணித்த 5 படகுகளையும் கடற்படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் இலங்கை தூதுவரை அழைத்து எச்சரிக்கை விடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோன் சிங்கிற்கு கடிதம் எழுதி ஒரு நாளில் மற்றுமொரு தொகை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தற்போது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய அத தெரண தமிழிணையத்திடம் தெரிவித்தார்

0 கருத்துகள்:

Post a Comment