Search This Blog n

05 August 2013

ஆசிரியர் கனவு கலைந்ததால் இளம்பெண் தற்கொலை


ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லேஸ்வரி என்பவர் தனது பள்ளி பருவத்தில் இருந்தே ஆசிரியை ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வளர்ந்து வந்துள்ளார்.
பிளஸ் டூ முடித்த பின்னர் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் அந்த இளம்பெண் நுழைவு தேர்வு எழுதினார்.
தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை பெறாத அந்த பெண்ணை தங்கள் பயிற்சி கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், ஒரு பெரிய தொகையை லஞ்சமாக தர வேண்டும் என கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மகளின் ஆசையை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று நினைத்த அவரது தந்தை லஞ்சம் தந்தாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்பில் பணத்தை ஏற்பாடு செய்து வந்துள்ளார்.
அதற்குள் நாட்கள் கடந்துக் கொண்டே போனதால் ஆசிரியர் கனவு பலிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்த மல்லேஸ்வரி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment