Search This Blog n

08 August 2013

தாலிகட்டிய நிலையில் இளம்பெண் தற்கொலை: ஒரினச்சேர்க்கை?


தமிழ்நாட்டில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய நிலையில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் இராயக்கோட்டை ரயில்வே காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் ரம்யா(15). இவர் ராயக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
கிருஷ்ணணுக்கு சொந்தமான இன்னொரு வீட்டில் சித்தன், அவரது மனைவி கவுசல்யா(24) ஆகியோர் வாடகைக்கு வசித்து வந்தனர். அதனால் கவுசல்யாவும், ரம்யாவும் இணை பிரியா தோழிகளாக பழகி வந்தனர்.
இந்நிலையில் பள்ளிக்கு சென்ற ரம்யாவை திடீரென்று காணவில்லை, வீட்டில் இருந்த கவுசல்யாவையும் காணவில்லை, அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இருவரையும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் பொலிசில் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து மாயமானவர்களை தேடினர். அப்போது சிலர், "இருவரும் ராயக்கோட்டை தூர்வாசன் மலைப்பகுதியில் நடந்து சென்றனர்,'' என தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் பொலிசார் நேற்று மாலை தூர்வாசன் மலைப்பகுதியில் சென்று இருவரையும் தேடியபோது அங்கிருந்த ஒரு மறைவிடத்தில்,கவுசல்யாவும், ரம்யாவும் விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தியதில் கவுசல்யா கணவர் சித்தனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால், அவருக்கும் கவுசல்யாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதை கவுசல்யா தனது தோழி ரம்யாவிடம் கூறியுள்ளார். இந்த நட்பு காலப்போக்கில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளனர்.
பள்ளிக்கு சென்று திரும்பியதும் ரம்யா கவுசல்யாவின் வீட்டிலேயே போய் இருந்துள்ளார். இதை விரும்பாத ரம்யாவின் குடும்பத்தார் இருவரையும் கூப்பிட்டு கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட இருவரும் தூர்வாசன் மலைக்கு சென்று அங்கே ரம்யாவுக்கு கவுசல்யா தாலிகட்டியுள்ளார். இரவு முழுவதும் அங்கேயே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு பிறகு காலை நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்கள் குடித்த பூச்சி மருந்து பாட்டில் அங்கேயே கிடந்துள்ளது.
ஆனாலும், இருவரும் தற்கொலை செய்ததிற்கான முழுமையான காரணம் தெரியாமல், இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கலாமா? என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 

0 கருத்துகள்:

Post a Comment