Search This Blog n

14 August 2013

தி.மு.க தலைவராகிறார் கனிமொழி,,,


ராஜ்யசபா திமுக எம்.பிக்களின் தலைவர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட உள்ளார்.
ராஜ்யசபாவில் திமுக சார்பில் கனிமொழி, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, கே.பி ராமலிங்கம், செல்வகணபதி, தங்கவேலு ஆகியோர் எம்.பி.க்களாக உள்ளனர்.
இந்நிலையில் ராஜ்யசபாவில் திமுக தலைவராக பதவி வகித்து வந்த திருச்சி சிவாவின் பதவிக்காலம் கடந்த மாதத்துடன் முடிவடைந்து விட்டதால், அப்பகுதி காலியாக உள்ளது.
இதனையடுத்து கனிமொழிக்கு ராஜ்யசபா தி.மு.க. எம்.பி.க்களுக்கான தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக தி.மு.க.பொதுச்செயலாளர் அன்பழகன், ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்
 

0 கருத்துகள்:

Post a Comment