Search This Blog n

22 December 2012

5 கர்ப்பிணிகள் உட்பட 16 கலைமான்கள் உயிரிழப்பு


ராஜஸ்தானில் மாநிலத்தில் கோட்டா நகரில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த கலைமான்கள் 16 மான்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இது குறித்து மாவட்ட வனசரக அலுவலர் அனுராக் பரத்வாஜ், கல்லீரல் ந‌ோய் காரணமாக மான்கள் பலியாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
வனவிலங்கு சரணாலய மருத்துவர் அகிலேஷ்பாண்டே, அதிகமான குளிர் மற்றும் கல்லீரல் நோயால் மான்கள் பலியானதாக கூறியுள்ளார்.
இங்கு 21 மான்கள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் மோசமான பராமரிப்பு காரணமாக 16 மான்கள் பலியாகியிருப்பது கறுப்பு நாளாகும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இதில் 5 பெண் கலைமான்கள் கர்ப்பிணியாக இருந்துள்ளது குறி்ப்பிடத்தக்கது
.

0 கருத்துகள்:

Post a Comment