செவ்வாய் கிரகத்தில்
உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்து அமெரிக்க விண்வெளி மையமான நாசா ஆய்வு
செய்து வருகிறது.
இதற்காக நாசாவால் கியூரியாசிட்டி என்ற விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்விண்கலம் செவ்வாய் கிரகத்தின் அமைப்பு, பாறை, மணல், சுற்றுப்புற சூழல், காற்றின் வேகம் மற்றும் புழுதி புயல் போன்றவற்றை ஆய்வு செய்து புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறது. இதன் மூலம் உயிரினங்கள் வாழ முடியும் என்பது விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள எரிமலை சிகரத்தில் கியூரியாசிட்டி இன்று ஏற தொடங்கியுள்ளது. இந்த எரிமலையின் சிகரம் 3 மைல் உயரம் கொண்டது. அதன் மீது ஏற தொடங்கியுள்ள கியூரியாசிட்டி வருகிற பிப்ரவரி மாதம் மத்தியில் மலையில் சிகரத்தை எட்டும். மேலும் அங்குள்ள பாறைகளை வெட்டி புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். இத்தகவலை கியூரியாசிட்டி ஆய்வு தலைமை விஞ்ஞானி ஜான் கிராட்ஷின்ஜர் தெரிவித்துள்ளார் |
0 கருத்துகள்:
Post a Comment