மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. |
புனே- வாகோலி என்னுமிடத்தில் ஆயுர்வேத கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் 4வது மாடியின் கட்டுமானப் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நேற்று பிற்பகல் அவர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒரு சிமெண்ட் சிலாப் திடீரென இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 13 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியானார்கள். இன்னும் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். |
0 கருத்துகள்:
Post a Comment