அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் Van Nuys என்ற இடத்தில் பஸ் நிறுத்தத்தில் உள்ள சிமிண்ட் பெஞ்ச் ஒன்றில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அந்த் சிமிண்ட் பெஞ்ச் அடியில் நெருப்பு வைத்த்தாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார்.
Van Nuys section of Los Angeles என்ற பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் 67 வயது பெண் ஒருவர் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு எவ்வித சொந்த வீடும் இல்லாததால், தினசரி அந்த பெஞ்ச் மீது தூங்குவது வழக்கமாக இருந்திருக்கின்றது. அந்த பஸ் நிறுத்தத்திற்கு அருகில் கடை வைத்துள்ள ஒரு இருபது வயது இளைஞர் அந்த பெண்ணை பலமுறை அந்த சிமிண்ட் பெஞ்ச் மீது படுத்து தூங்கக்கூடாது என எச்சரித்துள்ளார். ஆனால் அந்த பெண், அந்த இளைஞரின் பேச்சைக் கேட்காததால், ஆத்திரத்தில் அந்த பெண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது, சிமிண்ட் பெஞ்ச் அடியில் தீவைத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பெண், அருகிலுள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருபது வயது இளைஞரின் பெயர் மற்றும் புகைப்படத்தை வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர்
0 கருத்துகள்:
Post a Comment