Search This Blog n

20 December 2012

குஜராத் சட்ட மன்ற தேர்தல்: மோடி ஹாட்ரிக் வெற்றி?

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கையில், காலை முதலே பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றிருந்தது.
இன்று காலை 9.30 மணி நிலவரப்படி முன்னிலை நிலவரம் தெரியவந்த 155 தொகுதிகளில் பாஜக 96 தொகுதிகளிலும், காங்கிரஸ் 53 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தது.
இந்தத் தேர்தலில் அதிக அளவிலான படேல் இனத்தவரின் வாக்குகளைப் பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேசுபாய் படேலின் கட்சி 3 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மீண்டும் தனது செல்வாக்கை இந்தத் தேர்தலில் நிரூபித்து சாதனை படைத்துள்ளார்.
எனவே பாஜக இங்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


0 கருத்துகள்:

Post a Comment