செய்யாத குற்றத்திற்காக 15
ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்த நபர், நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
நேபாளத்தை சேர்ந்த கோவிந்த பிரசாத்(வயது 46) என்பவர் ஜப்பானில் ஓட்டல் ஊழியராக
வேலை செய்து வந்தார். இவர் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகே செக்ஸ் தொழிலாளி ஒருவர்,1997ம் ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த செக்ஸ் தொழிலாளியுடன் கோவிந்த பிரசாத்துக்கு தொடர்பு உண்டு என்பதால், இந்த கொலையை அவர் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த கொலையில் அவருக்கு தொடர்பில்லை என கீழ் நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் ஐகோர்ட்டில் இவர் மீது கொலை குற்றம் சாட்டியது. இதையடுத்து கோவிந்த பிரசாத் டோக்கியோ சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 15 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த கோவிந்த பிரசாத்துக்கு, இந்த கொலை வழக்கில் தொடர்பில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனை தொடர்ந்து தற்போது அவர் விடுவிக்கப்பட்டார். செய்யாத கொலைக்காக 15 ஆண்டு சிறையில் அடைத்ததற்காக ஜப்பான் அரசு, நான்கு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளார் |
0 கருத்துகள்:
Post a Comment