முன்னாள் இத்தாலிய பிரதமரும், 76 வயது கோடீஸ்வரருமான Silvio Berlusconi, தன்னை விட 50 வயது குறைவாக உள்ள தனது காதலியை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.
இரண்டுமுறை இத்தாலி நாட்டின் பிரதமராக பணியாற்றிய Silvio Berlusconi ஒரு கோடீஸ்வர தொழிலதிபரும் ஆவார். மனைவியை இழந்த இவருக்கு தற்போது வயது 76. இவர் தன்னை விட 50 வயது குறைவான, அதாவது 27 வயதுள்ள Francesca Pascale என்ற இளம்பெண்ணை காதல் புரிந்து வருகிறார். இந்த பெண்ணும் இவர் மீது தீவிர காதல் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் Silvio Berlusconi தனது திருமணத்தை திடீரென அறிவித்துள்ளார்.
26 வயது Francesca Pascale ஐ தான் மிகவும் நேசிப்பதாகவும், அதுபோலவே அவரும் தன் மீது மிகுந்த காதல் வைத்திருப்பதால், இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்ததாகவும் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் இவர்களுடைய காதலுக்கு இவருடைய மகள், Marina அவர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். விரைவில் இவர்களது திருமணம், ரோம நகரல் மிகவும் பிரமாண்டமாக நடக்கவிருக்கின்றது.
0 கருத்துகள்:
Post a Comment