சுவிட்சர்லாந்தின் பெரும்பணக்காரரான
இங்வார் காம்ப்ராடு(Ingvar Kamprad) "இக்கியா அறைகலன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து
இலாபத்தை ஈட்டி வர்த்தகத் துறையில் வெற்றி வாகை சூடுவதன் முக்கிய காரணம்,
அந்நிறுவனம் தனியார் வசம் இருப்பதேயாகும்" என்று கூறினார்.
காம்ப்ராடு தனது மனைவி அமரர் மார்கரெட் பெயரில் லாசேனின் தொழில்நுட்பக் கூட்டரசு
கல்லூரியில் ஒரு ஆய்வகத்தைத் தொடங்கினார். இந்த ஆய்வகம் சுற்றுப்புற அறிவியல் மற்றும் குளத்தில் வாழும் உயிரினங்களுக்கான மார்கரெட் காம்ப்ராடு ஆய்வகம் என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடக்கவிழாவில் பேசிய காம்ராடு தனியார் கையில் இருப்பதால்தான் இக்கியா நிறுவனம் லாபகரமாக நடப்பதாகத் தெரிவித்தார். காம்ராடு பேட்டிகள் அளிப்பதில்லை என்றாலும் இணையதளம் வழியாக அளித்த பேட்டியின் போது இக்கியாவின் வெற்றி ரகசியத்தை வெளிப்படுத்தினார். உலகின் மிகப்பெரிய அறைகலன் விற்பனையாளராக விளங்கும் இக்கியாவின் வணிக முத்திரை 9 பில்லியன் யூரோ மதிப்புடையதாகும். வருடாந்திர வருமான அறிக்கையின்படி 2011ம் ஆண்டில் இலாபம் 10.3 சதவீதம் உயர்ந்துள்ளது. சரக்குகள் 25 பில்லியன் யூரோ மதிப்புக்கு விற்பனையாகி உள்ளன. லாசேன் அருகில் வசிக்கும் காம்ப்ராடை பிரபல பத்திரிக்கையொன்று கடந்த வாரம், 39 பில்லியன் ஃபிராங்க் சொத்துடையவர் என்றும், இவரே நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது |
0 கருத்துகள்:
Post a Comment