புவியின் வெப்பம் அதிகரித்து வருவதால் இன்னும் 50 ஆண்டுகளில் சென்னை உட்பட தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். |
இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பின் நூற்றாண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக
சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான அறிவியல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2 டிரில்லியன் தொன் ஐஸ் கட்டிகள் உருகிவிட்டதாகவும், எதிர்காலத்தில் சென்னை உட்பட ஏராளமான பகுதிகள் கடலுக்குள் மூழ்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்தனர். மேலும் இம்மாநாட்டின் தீர்மானங்களையும், முக்கியமான பரிந்துரைகளையும் வரும் 22ம் திகதி அறிவியல் காங்கிரஸ் கூட்டமைப்பினர் பிரதமரிடம் வழங்கவுள்ளனர். மாயன் காலண்டர் முடிவடைதால் உலகமே அழிந்துவிடப்போகிறது என்று ஒரு தரப்பினர் கூறிவரும் நிலையில் இன்னும் 50 ஆண்டுகளில் தமிழகத்தின் கடற்கரையோரப்பகுதிகள் அழிந்துவிடுமென இவர்கள் கூறுவது முரண்பட்ட கருத்துக்களாக காணப்படுகிறது |
0 கருத்துகள்:
Post a Comment