சுவிட்சர்லாந்தில் உள்ள Ensi
எனப்படும் சுவிஸ் கூட்டரசு அணுப் பாதுகாப்பு கண்காணிப்பகமானது சுதந்திரமாக
யல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை நிர்வாகம் மற்றும் பணியாளர் மீது முழு
நம்பிக்கை வைத்துள்ளது.
நாக்ரா எனப்படும், அணுசக்திக் கழிவை வெளியேற்றும் நிருவனமானது, தேசியக்
கூட்டுறவு மையத்தின் கட்டளைப்படி தனது செயல்பாடுகளைத் திட்டமிடுவதில்லை என்று Ensi
ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அணுசக்தி கண்காணிப்பகத்தின் தலைவரான ஆனி எக்ஹார்ட்(Anne Eckhardt) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் நாக்ரா எங்களது பணிகளில் தலையிட்டதற்கான ஆதாரம் எதுவுமில்லை, என்று உறுதியாகக் கூறினார். அணுசக்தி கண்காணிப்பகம் அணுசக்தி மையங்களின் செயற்பாடு, அணுசக்திக் கழிவுகளைத் தற்காலிகமாகச் சேகரித்து வைத்தல் லாசேனில் உள்ள கூட்டரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் வில்லின்கெனில் உள்ள பால் ஷெரர் கல்லூரி, பேசெல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள அணுசக்தி ஆய்வகங்களை கண்காணித்து வருகிறது. திட்டமிடல், செயற்பாடு, கழிவுகளை அப்புறப்படுத்துதல் போன்றவற்றையும் இக் கண்காணிப்பகம் கண்காணித்துவருகிறது. அணுசக்தி நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவக்கைகளையும் கண்காணிக்கிறது. தீவிரவாத செயல்கள் நடைபெறாவண்ணம் அணுசக்தி நிலையங்களைப் பாதுகாக்கின்றது. 1972ம் ஆண்டில் நாக்ராவுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டது. நாக்ரா கதிர்வீச்சு கழிவுகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். இதற்கான அரசாணை நாக்ராவுக்கு வழங்கப்பட்டது. அன்று முதல் தாம் இப்பணியைச் செம்மையாகச் செய்துவருவதாகவும், மனிதர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நீண்டகாலத்துக்கு அணுசக்திக் கழிவுகளால் எவ்வித ஆபத்தும் ஏற்படாதவாறு பாதுகாத்து வருவதாகவும் தனது இணையதளத்தில் நாக்ரா தெரிவித்துள்ளது. |
0 கருத்துகள்:
Post a Comment