Search This Blog n

22 December 2012

லட்சக் கணக்கான தமிழ் ஆண், பெண்கள் கொலை


பி.பி.சீ ஊடகவியலாளர் வெளியிட்டுள்ள தகவல்கள் பிழையானவை என இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

போர் இடம்பெற்ற காலத்தில் படையினர் லட்சக் கணக்கான தமிழ் ஆண், பெண்களை கொலை செய்ததாக பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். 2004ம் ஆண்டு பிரான்சிஸ் ஹரிசன் இலங்கையை விட்டு வெளியேறிச் சென்றார்.
லண்டனில் உள்ள பத்து பேர் வழங்கிய போலித் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சாட்சியாளர்கள் வன்னிப் போரின் போது எந்த இடத்தில் இருந்தார்கள் என்பதனை நிரூபிக்குமாறு சவால் விடுக்கின்றோம். சாட்சியாளர்களில் முருகன் என்ற நபர் கடற் புலி வீரராகும். இவர் பிரான்சிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், பிரான்சிஸ் ஹரிசனின் இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என உயர் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment