இந்தியாவில் தரமற்ற பொருட்களைக் குவிக்கும் சீனாவின் நடவடிக்கையைத் தடுக்க அரசுக்கு புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இந்தியாவில் இறக்குமதியாகும் சீனப் பொருட்களின் தரம் குறித்து, உரிய
ஆதாரங்களுடன் புகார் செய்யப்பட்டால், மத்திய அரசு அதைத் தடுக்கும் என
மாநிலங்களவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சர் புரந்தேஸ்வரி தெரிவித்தார். தரமற்றப் பொருட்களைக் குவிப்பதை எதிர்த்து நடவடிக்கை எடுக்க, உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் இந்தியாவுக்கு அதிகாரம் இருப்பதாகவும் அவர் கூறினார். பொருட் குவிப்பு தடுப்பு வரி, இறக்குமதி கட்டுப்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் இதை மேற்கொள்ளலாம் என்றும் அமைச்சர் புரந்தேஸ்வரி தெரிவித்தார் |
0 கருத்துகள்:
Post a Comment