அமெரிக்காவில் சுரங்க ரயிலில்
தள்ளி நபரொருவரை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் குயின்ஸ் பகுதியில் இந்தியரான சுனந்தோ சென் என்பவர் தனது
நண்பர்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி சுரங்க ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம பெண் அவரை கீழே தள்ளி கொலை செய்து விட்டார். அதன் பின் அந்த பெண் தப்பி சென்றார். இந்த விபரங்கள் அங்கிருந்த வீடியோ கமெராவில் பதிவாகி இருந்தது. இதனையடுத்து குறித்து பெண்ணை பற்றி துப்பு கொடுப்பவருக்கு 12,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் என பொலிசார் அறிவித்தனர். தற்போது இந்தக் கொடூரக் கொலையை செய்ததாக எரிகா என்ற 31 வயது பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கடந்த 2001-ம் ஆண்டு நியூயார்க் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தமக்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது என்றும், இதன் காரணமாகவே அவரை கொலை செய்தேன் என்றும் அப்பெண் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், சுமார் 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கக் கூடும்.[புகைபடங்கள்] |
0 கருத்துகள்:
Post a Comment