Search This Blog n

18 December 2012

அரியாலையில் வாகன விபத்து ஒருவர் பலி!

 
யாழ்ப்பாணம் - அரியாலை, பொன்னம்பலம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிரக்டர் வாகனத்துடன் மோட்டார் வண்டி ஒன்று மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தின் போது மோட்டார் வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நாவற்குழி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

0 கருத்துகள்:

Post a Comment