பாலஸ்தீனிய தலைவர் யாஸர்
அராஃபத்(Palestinian leader Yasser Arafat), போலோனியம் என்ற விஷம் கொடுத்துக்
கொல்லப்பட்டாரா என்பதை அறிய அவரது உடலிலிருந்து அறுபது உடற்கூறு மாதிரிகளை
மருத்துவர் எடுத்திருப்பதாக செய்தித்தாள்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
ஃபிரான்ஸ் மருத்துவமனை ஒன்றில் எட்டாண்டுகளுக்கு முன்பு சிகிச்சை பெற்றுவந்த
அராஃபத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் பாலஸ்தீனியாவில் உள்ள
ரமல்லாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இப்போது இவரது உடலிலிருந்து அறுபது மாதிரிகளை
எடுத்து மூன்று புலனாய்வுக் குழுவினர் தனித்தனியாக ஆராய்கின்றனர். பாலஸ்தீனிய மருத்துவரை மட்டுமே அராஃபத்தின் உடலைத் தொட அனுமதித்தனர். அராஃபத்தின் கல்லறையைத் திறந்து அவரது உடலை வெளியே எடுத்தனர். சுவிட்சர்லாந்தின் லாசேன் மாநிலத்தில் உள்ள சுவிஸ் பல்கலைக்கழக மையத்தின் இயக்குநரான மேன்ஜின், இந்தப் புலனாய்வு முடிந்து மரணத்தின் மர்மம் வெளிப்பட மூன்று நான்கு மாதங்கள் ஆகலாம், என்றார். பாலஸ்தீனிய மருத்துவர் ஒரு ஆய்வை நடத்துகிறார். அராஃபத்தின் மனைவி சுஹாவின் கோரிக்கையை ஏற்றி பிரெஞ்சு மருத்துவர் குழு ஒன்றும் இந்த 60 மாதிரிகளையும் பெற்று தனியாக ஒரு ஆய்வை நடத்துகிறது. பாலஸ்தீனிய அரசு அதிகாரி இதுதவிர ரஷ்ய மருத்துவக் குழுவினரும் ஓர் ஆய்வை நிகழ்த்துகின்றனர். பாலஸ்தீனிய ஆய்வு குழுவின் தலைவரான தஃபீக் திராவி, ரமல்லா அரசு, அராஃபத்தின் மரணம் விஷத்தால் நிகழ்ந்திருக்கலாம் என ஹேக் நகரத்தில் உள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஒரு விண்ணப்பம் அனுப்பி விசாரணை நடத்தும்படி கோரிக்கை விடுக்கும், என்றார். போலோனியத்தின் விளைவுகள் அராஃபத்திடம் தெரிந்தன என்று தகவல் கசிந்ததின் பேரில் இந்தப் புலனாய்வுக் குழுக்கள் புதைந்து கிடக்கும் உண்மையை உலகுக்கு அறிவிக்கக் களமிறங்கின. இதற்கு முன்பு ரஷ்ய உளவாளி ஒருவருக்குப் போலோனியம் கொடுத்துக் கொன்ற சம்பவம் வரலாற்றில் பதிவாகி உள்ளது. போலோனியம் கடுமையான கதிர்வீச்சு கொண்டதாகும். |
0 கருத்துகள்:
Post a Comment