எங்களுக்கென்று தற்போது நாடொன்று உள்ளது என பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்நிலையில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் நடந்த வாக்கெடுப்பில், பாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத கண்காணிப்பாளர் நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
அந்தஸ்தை பெற்ற பின்னர், பாலஸ்தீனம் திரும்பிய ஜனாதிபதிக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் பேசுகையில், நாம் வெற்றி பெற்று வி்ட்டோம், இனி பாலஸ்தீனம் தனிநாடு தான்.
இது பாலஸ்தீனியர்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இதனை நாம் தற்போது கொண்டாடும் தருணம் வந்துவிட்டது.
நம்மிடம் இருந்த பிரிவினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது ஐ.நா. இது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என்றார்.
இதற்கு முன்னதாக பாலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசர் அராபத் நினைவிடம் சென்று அப்பாஸ் அஞ்சலி செலுத்தினார்
{காணொளி, புகைபடங்கள்,}
0 கருத்துகள்:
Post a Comment