உலகளவில் மிகவும்
விருப்பத்திற்கு உரிய பெண்ணாக ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோரன்ஸ் தெரிவாகி உள்ளார்.
ஆண்கள் இணையத்தள இதழான ஆஸ்க் மென்.காம், ஆண்களின் மத்தியில் தனக்கென தனி இடத்தை
வைத்திருப்பவர்கள் குறித்து வாக்கெடுப்பு நடத்தியது. இதில் 22 வயதான ஹாலிவுட் நடிகர் ஜெனிபர் லோரன்சுக்கு 20.4 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இதுகுறித்து குறித்த இணையத்தளத்தின் ஆசிரியர் ஜேம்ஸ் பாஸில் கூறுகையில், மற்றவர்களை விட ஜெனிபருக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. ஜெனிபர் புத்துணர்வு மிக்கவர், எந்த வதந்தியிலும் சிக்காதவர். அதுவே அவருக்கு நிறைய ஆதரவாளர்களைத் திரட்டிக் கொடுத்து விட்டது என்றார். இந்த வாக்கெடுப்பில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பவர் ஹாலிவுட் நடிகை மிலா குனிஸ். மூன்றாவது இடத்தில் பிரபல மொடல் அழகி கேட் உப்டனும், நான்காம் இடத்தில் கருப்பழகி ரிஹானாவும், ஐந்தாம் இடத்தில் நடிகை எம்மா ஸ்டோன் இடம்பெற்றுள்ளனர். கடந்தாண்டு முதலிடத்தில் இருந்த பிரபல தொலைக்காட்சி நடிகையான சோபியா வெர்கராவுக்கு, தற்போது 12வது இடம் கிடைத்துள்ளது. Jenifer Lawrance. |
0 கருத்துகள்:
Post a Comment