Search This Blog n

27 December 2012

விரதமிருப்பவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பு இல்லை!


ஒரு நாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

விரதம் இருப்பது என்பது பல்வேறு மதங்களிலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். ஆண்டில் பல நாட்கள் விரதம் இருப்பது இந்துக்கள் வழக்கம். குறிப்பாக பெண்கள் மாதம் ஒரு நாளாவது நோன்பு இருப்பார்கள். வாரம் ஒருநாள் நோன்பு இருப்பவர்களும் உண்டு.

முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஒரு மாதத்துக்கு பகல் நேரங்களில் நோன்பு இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் புனித வெள்ளியையொட்டி உபவாச ஜெபம் என்ற நோன்பு இருப்பது வழக்கம். இப்படி விரதம் இருப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது டாக்டர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விரதம் இருப்பதன் பயன்கள் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில மாதம்தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களில் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களுக்கு, மற்றவர்களைவிட மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பெஞ்சமின் ஹோர்ன் கூறி உள்ளார்.

0 கருத்துகள்:

Post a Comment