சுவிட்சர்லாந்தின் சர்வதேச விமானம்
ஒன்று இலண்டனுக்கு வடக்கேயுள்ள ஸ்ட்டான்ஸ்ட்டெட் விமான நிலையத்திலிருந்து
ஜெனீவாவுக்குப் புறப்பட்ட வேகத்தில் தரையிறங்கியது.
எஞ்சினுக்குள் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானிகள் உடனே பத்திரமாக விமானத்தைத்
தரையில் இறங்கினர். இலண்டனில் இருந்து ஜெனீவாவுக்கு 96 பயணிகளை ஏற்றிக்கொண்டு நான்கு எந்திரங்களைக் கொண்ட ஜம்போலினோ விமானம் புறப்பட்டது. மேலே ஏறிய சிறிது நேரத்திலேயே மிகப்பெரிய சத்தம் கேட்டதும் பயணிகள் பயந்துவிட்டனர். விமான எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பெருத்த சத்தம் கேட்டதை அறிந்த விமானிகள் உடனே விமானத்தை கவனமாக கீழே இறக்கினர். பின்பு, ஸ்ட்டான்ஸ்ட்டெடில் இருந்து இலண்டனில் உள்ள ஹீத்ரோ விமானநிலையத்துக்கு பயணிகளை பேருந்தில் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் வேறு விமானத்தில் ஜெனீவா அனுப்பி வைக்கப்பட்டனர். |
0 கருத்துகள்:
Post a Comment