செய்துவிட்டு அவசரமாக திரும்பினார் ஒபாமா.அமெரிக்க ஜனாதிபதியாக தொடர்ந்து 2–வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா, அங்குள்ள ஹவாய் தீவிற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சென்றிருந்தார். இங்குதான் ஒபாமா பிறந்தார் என்பது நினைவு கூறத்தக்கது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஹவாயில் கொண்டாடிவிட்டு அவர் வாஷிங்டன் திரும்ப முடிவு செய்திருந்தார். ஆனால் இப்போது விடுமுறையை பாதியிலேயே ரத்து செய்து விட்டு வாஷிங்டன் திரும்ப ஒபாமா அதிரடியாக முடிவு செய்தார்.நாளை (வியாழக்கிழமை) காலை அவர் வாஷிங்டன் திரும்புகிறார்.
நிதி நெருக்கடியிலிருந்து அமெரிக்கா மீளுவது தொடர்பாக ஒபாமா, அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவார் என தெரியவந்துள்ளது. கடுமையான வரி உயர்வை தடுக்கவும், செலவில் கடுமையான வெட்டு கொண்டு வரவும் மேற்கொண்ட முயற்சியில் இழுபறி உள்ளது. இதனால் உலக நிதி சந்தைகள் கவலை கொண்டுள்ளன.இந்த விவகாரத்தில் ஒபாமா, தனது நம்பகமான கூட்டாளியான செனட் மெஜாரிட்டி தலைவர் ஹார்ரி ரெய்டின் உதவியை நாடுவார் என தெரிகிறது
0 கருத்துகள்:
Post a Comment