சீன
இராணுவத்தில் செலவு மற்றும் ஆடம்பரத்தை தடுக்க பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை அரசு
கொண்டு வந்துள்ளது.
சீனாவில் கம்யூனிஸ்ட் தலைவராக சமீபத்தில் ஜி ஜின்பிங் நியமிக்கப்பட்டார். இவர்
இராணுவத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார். இராணுவத்தில் ஆடம்பரம் இல்லாமல் எளிமையை கொண்டு வரவும், செலவுகளை குறைக்கவும் பல விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார். இது குறித்து 10 விதிமுறைகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விருந்தின் போது உயரதிகாரிகளுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் ஆடம்பர வரவேற்பு அளிக்க கூடாது. விருந்தின் போது உயர்ரக மது வகைகள் வழங்க கூடாது. அதிகாரிகளை வரவேற்க பேனர்கள் வைக்க கூடாது. சிவப்பு கம்பள வரவேற்புக்கு செலவிட கூடாது. அலங்காரம், நூற்றுக்கணக்கான வீரர்கள் அணிவகுப்பு, நினைவு பரிசு போன்றவற்றுக்கு பணம் செலவிட கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ராணுவ அதிகாரிகள் ஆய்வு பணிக்காக வெளியூர் செல்லும் போது ஆடம்பர வசதிகள் கொண்ட தனியார் ஹோட்டல்களிலோ, இராணுவ ஹோட்டல்களிலோ தங்க கூடாது. வெளிநாட்டு பயணங்களை குறைத்து கொள்ள வேண்டும், அடிக்கல் நாட்டு விழா, ரிப்பன் வெட்டி கடை திறப்பது போன்ற நிகழ்ச்சிகளில் அதிகாரிகள் பங்கேற்க கூடாது. மனைவி, குழந்தைகள், உடன் வேலை செய்பவர்கள் ஒழுக்கமாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் ஊழல் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற அதிரடி கட்டுப்பாடுகளால் சீன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் |
0 கருத்துகள்:
Post a Comment