பிலிப்பைன்ஸை தாக்கிய
வெப்ப மண்டல சூறாவளிக்கு இதுவரையிலும் 11 பேர் பலியாகி உள்ளனர்.
பசிபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸை வுவோங் என்ற வெப்ப
மண்டல சூறாவளி தாக்கியது. பிலிப்பைன்சின் மத்திய பகுதியை தாக்கிய இந்த சூறாவளிக்கு, 11 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து அந்நாட்டு தேசிய பேரிடம் மையம் கூறுகையில், சமர் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் நிலச்சரிவு காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். மற்றவர்கள், நிலச்சரிவில் சிக்கி பலியானார்கள் என்று தெரிவித்துள்ளது. சமீபத்தில் தான் பிலிப்பைன்சை புரட்டி போட்ட போபா புயலுக்கு 1000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது |
0 கருத்துகள்:
Post a Comment