லயன் எயார் விமானத்தில் பயணித்த 31 பேரின் உடற் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
பூனகரி பிரதேசத்தில் இந்த சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. இந்த விமானத்தில் மொத்தமாக 55 பேர் பயணம் செய்துள்ளதாகவும், இதில் 31 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலங்களை மீட்கும் நோக்கில் பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி முதலில் நடத்திய தேடுதலில் ஒரு சடலமேனும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, லயன் எயார் விமானத்தில் பயணித்த எந்தவொரு பயணியினது சடலமும் கிடைக்கவில்லை என மற்றுமொரு சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment