Search This Blog n

29 December 2012

நீண்ட நதியின் குறுக்கே சுரங்க ரயில் பாதை:சீனா சாதனை




ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸியின் குறுக்கே 27 கி.மீ. தூர சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இப்பாதையில் ரயில் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.
குபெய் மாகாணத்தின் ஊகான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ஊசாங் மற்றும் ஹன்கூ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பாதையை 3 நிமிடங்களில் ரயில்கள் கடந்து விடும். நாள்தோறும் 26 ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுளளது.
சுரங்க ரயில் பாதை திறக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கப்பல் போக்குவத்தும், மேம்பால சாலைப் போக்குவரத்தின் தேவையும் குறையும்.
ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸி, சீனாவின் வடமேற்குப் பகுதியில் உருவாகி 6,300 கி.மீ. தூரம் பயணம் செய்து கடலில் கலக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன், பெய்ஜிங்குக்கும் - குவாங்செüவுக்கும் இடையே உலகின் மிக நீண்ட அதிவேக இருப்புப் பாதையில் (2,298 கி.மீ.) ரயில் போக்குவரத்தை சீனா தொடங்கி சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

Post a Comment