கண்டனங்கள் எழுந்திருக்குமா புதுடெல்லியில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவம் நாட்டின் ஏதாவதொரு கிராமத்தில் நடைபெற்றிருந்தால் இதே அளவுக்கு கண்டன அலை எழுந்திருக்குமா என்று நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார். |
இது தொடர்பில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, இந்த
சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று பல
தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர். இதே சம்பவம் ஒரு பின்தங்கிய கிராமத்தில் நடந்திருந்தால் ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் இந்த அளவுக்கு கண்டனம் தெரிவித்திருப்பார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுமட்டுமே இந்தியாவின் முக்கியப் பிரச்னை அல்ல, இதுபோல வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் தற்கொலை, மருத்துவ சிகிச்சையின்மை போன்றவையும் முக்கியப் பிரச்னைகளாக உள்ளன. அவற்றையும் உடனடியாக சரி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என்று பேசினார் |
0 கருத்துகள்:
Post a Comment