பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. |
மாணவியின் உடலுடன் சிங்கப்பூரில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்ட
விமானம், அதிகாலை 3.30 மணிக்கு டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை
வந்ததடைந்தது. பின்னர் தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் விமான நிலையத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து, கொண்டு வரப்பட்ட மாணவியின் உடல், டெல்லி வந்த சில மணி நேரங்களில் தகனம் செய்யப்பட்டது. மாணவியின் உடலுக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் மாணவியின் பெற்றோரை இருவரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மாணவி வசித்த டெல்லி மஹாவீர் கிளைவிவ் பகுதியில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. கடும் பனி மூட்டத்திற்கு இடையே நடைபெற்ற உடல்தகனத்தில் ஆர்.பி.சிங் பங்கேற்றார். நடந்த சம்பவத்தின் விபரம்: பிஸியோதெரபி மாணவியான குறித்த பெண், கடந்த 16ம் திகதி இரவு, பேருந்து ஒன்றில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவருக்கு டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. பின்னர், மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த மாணவியின் மூளை, நுரையீரல், குடல் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாணவியைக் காப்பாற்ற மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சி பலனைத் தரவில்லை. மரணத்துடன் போராடிய அவரது உயிர் நேற்று அதிகாலை 2 மணி 15 நிமிடங்களுக்கு பிரிந்தது.,¨,[புகைபடங்கள்] |
0 கருத்துகள்:
Post a Comment