Search This Blog n

29 December 2012

இரட்டை குடியுரிமை விரிவாக விசாரணை நடத்தப்படும்!

           
 
இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் போது, அவர்களை விசாரணை குழுவொன்றின் முன் அழைத்து, அவர்களின் பின்னணி குறித்து, விரிவாக விசாரணை நடத்தப்படும் முறையொன்றை அடுத்த வருடம் முதல் செயற்படுத்த உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய புதிய சட்டத்திட்டங்களை வகுப்பதற்காக பல்கலைக்கழக மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றின் மூலம் ஏற்கனவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர், ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், இரட்;டை குடியுரிமையை வழங்கும் போது, அவர்களை விசாரணை குழுவொன்றின் முன் அழைத்து,உரிய விசாரணைகளை நடத்தாது, இரட்டை குடியுரிமைகளை வழங்கியுள்ளன.

1980 ஆம் ஆண்டு பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள், இலங்கையில் வசிக்க முடியாது என கூறி, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்கு சென்று அரசியல் தஞ்சம் பெற்று அந்த நாடுகளின் பிரஜைகளாக மாறியுள்ளனர்.

போருக்கு பின்னர், அந்த நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புடைய புலிகளின் ஆதரவாளர்கள், இரட்டை குடியுரிமைகளை பெற்று சர்வதேச ரீதியில் இலங்கையை அபகீர்த்திக்கு உள்ளாக முயற்சித்து வருவது அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக முன்னைய சட்டங்களில் திருத்தங்களை செய்து, இரட்டை குடியுரிமை வழங்குவதில் புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோத்தபாய மேலும் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment