Search This Blog n

18 December 2012

பாலியல் செய்தியை வைத்து பேரம் பேசிய சன் நியூஸ்

 
நித்தியானந்தா செய்திகளை ஒளிபரப்புவதோடு அவரை மிரட்டி கோடிக்கணக்கான ரூபாய்களை பறிப்பதுதான் சன் நியூஸ் செய்தி ஆசிரியர் ராஜாவின் முக்கியமான வேலை என்று சன் குழுமத்தின் முன்னாள் சி.இ.ஒ சக்சேனா திடீரென குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கொமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று மாலை வந்த சக்சேனா, ஐயப்பன் ஆகியோர் சன்குழும நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன், சன்பிக்சர்ஸ் செம்பியன், தினகரன் பதிப்பாளர் ஆர்.எம்.ரமேஷ் மற்றும் கண்ணன் ஆகிய அனைவரும் தங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாக புகார் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சக்சேனா பேசுகையில், நான் சிறையில் இருந்தபோது சன் குழுமத்தைச் சேர்ந்த கலாநிதிமாறன் சொன்னதன் பேரில் என் மனைவியை மிரட்டி 12 கோடி ரூபாய் பணம் பறித்துக்கொண்டு போயிருக்கின்றனர்.
இதற்கான காணொளி, ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.
சித்தூரில் இருந்து ஆட்களை கூட்டிவந்து எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர்.
சன் நியூஸ் செய்தி ஆசிரியர் ராஜாவிற்கு அடுத்தவரை மிரட்டி பணம் பறிப்பதுதான் வேலை.
தமிழ்நாடு முழுவதும் நெட்ஒர்க் வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு தொழிற்சாலையை பற்றி படம் எடுத்துவிட்டு பின்னர் சுற்றுச்சூழல் சீர்கேடு என்று செய்தி போடுவார்கள்.
பின்னர் அதே தொழிற்சாலை அதிபர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் கேட்டு பேரம் பேசுவார்.
நித்தியானந்தா வழக்கிலும் இப்படித்தான் ஆனது. அவரிடம் பணம் கேட்டு அது கிடைக்காது என்று தெரிந்த பின்னர்தான் ராஜாவும், சன்நியூஸ் ஊழியர்களும் இந்த செய்தியை வெளியிட்டனர்.
இதேபோல் பலரிடம் பணம் கேட்டு மிரட்டியதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இப்போது நான் ஐயப்பன் புகாருக்காக உடன் வந்தேன்.
என்னுடைய புகார் தயாராகிக் கொண்டிருக்கிறது. அது அனைவரின் முகத்திரையையும் கிழிக்கும். விரைவில் அந்த புகாரைக் கொடுப்பேன் என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய ஐயப்பன், சன் பிக்சர்ஸிடமிருந்து எனக்கு 36 கோடி ரூபாய் வர வேண்டியிருக்கிறது.
அதைக் கேட்டால் ஆர்.எம். ரமேஷ், கண்ணன், செம்பியன், ஆகியோர் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர் என்றார்.

0 கருத்துகள்:

Post a Comment