விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன்
அசாஞ்ச், 2013ம் ஆண்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை
அம்பலப்படுத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் இருந்தபடி நேற்றிரவு கிறிஸ்துமஸ் வாழ்த்து
கூறியபோது அசாஞ்ச் இதனை தெரிவித்தார். விக்கிலீஸ் நிறுவனம் மனித உரிமைகள் மற்றும் நீதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக அசாஞ்சேவின் விக்கிலீக்ஸ் நிறுவனம், அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளுக்கு எதிரான ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அசாஞ்ச், பிரித்தானியாவில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் தஞ்சம் அடைந்துள்ளார். தூதரகத்தில் இருந்து வெளியே வந்தால் அவரை கைது செய்து, சுவீடனுக்கு நாடு கடத்த இங்கிலந்து முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், 6 மாதங்களுக்குப் பின்பு, முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் அசாஞ்ச் நேற்று உரையாற்றியுள்ளார் |
0 கருத்துகள்:
Post a Comment