புதிய ஐ
கடிகாரமொன்றை அப்பிள் நிறுவனம் உலகுக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை அனைவரும்
அப்பிளின் ரசிகர்களாக மாறிவருகின்றனர். அப்பிள் அறிமுகப்படுத்திய ஐ போன், ஐ பேட் அனைத்தும் வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ஐ கைகடிகாரமொன்றை அப்பிள் இரகசியமாக தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கடிகாரம் 1.5 அங்குலத்தில் தொடு திரை வசதியுடன் புளூடூத் மூலம் ஐ போன் போன்ற சாதனங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் தயாரிக்கப்படுகிறது. கடிகாரத்தின் திரையானது இண்டியம் டின் ஒக்சைட்(Indium tin oxid) பூச்சைக் கொண்ட மேற்பரப்புடன் கூடிய O.L.E.T வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் I.O.S மூலம் இக்கடிகாரம் இயங்குமெனவும் இதனூடாக அப்ளிகேசன்களை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும் என நம்பப்படுகின்றது. இதேவேளை இதேபோன்ற தொழில்நுட்பத்தை கொண்டுள்ள பெபெல் என்ற கடிகாரம் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
0 கருத்துகள்:
Post a Comment