23 January 2021
தனியார் விடுதி உரிமையாளர் காட்டு யானை மீது தீ வைத்தார்
காட்டு யானை மீது தீ வைத்த தனியார் விடுதி உரிமையாளர்– பாய்கிறது குண்டர் சட்டம் மனிதன் மட்டுமே சமூகமாக வாழக்கூடியவன். உணர்ச்சிகளை அனைத்து மிருகங்களும் வெளிப்படுத்தும், ஆனால் பிறரது உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மனிதர்கள் தான் என்கிறது சமூக அறிவியல்.
அதனால் தான் மனிதர்களை மட்டுமே சமூகம் என்கிறோம். சிங்க சமூகம், புலிச் சமூகம், மாட்டுச் சமூகம் என்று நாம் குறிப்பிடுவதில்லை. மனிதனை மட்டுமே மனித சமூகம் என்று குறிப்பிடுகிறோம்.
ஆனால் பல நேரங்களில் அக்கம்பக்கத்திலும், செய்தியிலும் கேட்கும் சில சம்பவங்கள் மனிதன் குறித்த சமூக அறிவியலின் கோட்பாடுகளை பொய்யாக்கி, அறிவியலை மெய்யாக்குகின்றது. எப்படியாயினும் விலங்கியல் மனிதனை விலங்காகத் தான்
வகைப்படுத்துகிறது.
உதகையின் மசினகுடியில் சமீபத்தில் நடந்த நெஞ்சை பிளக்க வைத்த ஒரு சம்பவம், மனிதம் குறித்தும் விலங்குகள் குறித்தும், மறுமதிப்பீடுக்கு வகை செய்யும் போல், 40 வயது மதிக்கத்தக்க ஒரு கொம்பன் யானை பல வருடங்களாக அங்கிருக்கும் யாருக்கும், எந்தவித தொந்தரவும் இல்லாமல் ஊருக்குள் சுற்றி வந்திருக்கிறது.
அந்த யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தோள்பட்டையில் எலும்புகள் முறிந்த நிலையில் சுற்றித் திரிந்தது. இதனையடுத்து வனத்துறையினர் மருத்துவம் அளித்து வந்த சூழலில், இரண்டு
நாட்களுக்கு முன்னர் கடுமையான தீக்காயங்களுடனும், அமிலத்தினால் ஏற்பட்ட அதீத காயங்களாலும் ஒரு பக்க காது கிழிந்து தொங்கிய நிலையில், இரத்தம் சொட்டச் சொட்ட ஊருக்குள்
சுற்றி வந்தது.
அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு மருத்துவம் அளித்தும் பயனளிக்காத நிலையில், வனத்துறையினரால் மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சைக்காக யானைகள் முகாமுக்கு கொண்டு
செல்லப்பட்டது.
ஆனால் எதிர்பாராதவிதமாக யானையை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரை விட்டது. அதை நிச்சயம் பிழைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையில், பல நாட்களாக அதற்கு சிகிச்சை அளித்த வனத்துறை ஊழியர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை
பதற வைத்தது.
பரிசோதனையில் அந்த யானையின் காதில் ஏற்பட்ட காயத்தில் அதிகமாக இரத்த இழப்பு ஏற்பட்டு இரத்தத்தை இழந்ததால் தான் உயிரிழக்க நேர்ந்தது எனத் மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில் யானை மீது வாகன எரிபொருளை நனைந்த தீப்பந்தத்தை எரிந்தவர்கள் தனியார் விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரியவந்தது.
இதனையடுத்து மசினகுடியில் யானை மீது எரியும் டயரை வீசிய மூன்று பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கே.கே.கவுசல் தெரிவித்துள்ளார்.
மேலும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் திவ்யா உத்தரவின் பேரில், காட்டுயானைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் நடந்த தனியார் விடுதிக்கு கூடலூர் வனத்துறையினர் சீல் வைத்தனர்.
இதையடுத்து புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த், வனச்சரகர்கள் காந்தன், மாரியப்பன் உள்ளிட்ட வனத்துறையின் தனிப்படையினர் தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல வருடங்களாக யாருக்கும் தீங்கிழைக்காமல் சுற்றி வந்த யானையின் சகிப்புத்தன்மையையும், அதன் இருப்பை சகிக்க முடியாமல், அதன் மீது திராவகமும், நெருப்புப் பந்தத்தையும் வீசிய மனிதர்களையும் ஒப்பிடுகையில், மனிதன் என்ற வரையறைக்குள்ளே மனிதன் வருகிறானா என்ற
சந்தேகம் வருகிறது.
இருப்பினும் அந்த வனத்துறை ஊழியர்களின் செயல், மனிதம் இன்னும் மனிதருள் அழியவில்லை என்ற
ஆறுதலை தருகிறது!
22 January 2021
ஓசூரில் தனியார் அடகு நிறுவனத்தில் துப்பாக்கிமுனையில் ரூ7 கோடி நகைகள் கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த ரூ7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள பத்து தனிப்படைகள் அமைத்துள்ளது காவல்துறை.
ஓசூரில் உள்ள முத்தூட் என்ற தனியார் நகை அடகு வைக்கும் அலுவலகத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் அமைந்துள்ள முத்தூட் தனியார் நகை அடகு வைக்கும் நிறுவனம், எப்பொழுதும்போல் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் காலை வழக்கம்போல்
வந்திருக்கின்றனர்.
அப்போது பின்பக்கத்திலிருந்து வந்த மர்ம நபர்கள் 6 பேர் கொண்ட கும்பல், அலுவலகத்தின் மேலாளர் உட்பட 6 ஊழியர்களை கட்டிப்போட்டு, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பாதுகாப்புப் பெட்டகத்தின் சாவியை வாங்கி, அதில் வைக்கப்பட்டிருந்த 25,091 கிராம் தங்க நகைகளையும், 96 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த நகர காவல்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், அருகிலுள்ள 'மறைகாணி' காட்சிகளையும் அவர்கள் ஆய்வு
செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், பகல்நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியைப் பெற்று கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தங்க நகைகளை அடகு வைத்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், கொரோனா காலத்தில் எங்களுக்கு வேலை இல்லாததால் தான், குடும்பத்தை நடத்த வேறு வழியின்றி தங்கத்தை அடகு வைத்தோம். இன்று அந்த நகை கொள்ளையடிக்கப்பட்டது என்று
கேள்விப்பட்டவுடன், இனி அந்த நகைகள் மீட்கவே முடியாதா என கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
பின்பு காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி கண்டிப்பாக உங்களுடைய நகைகளை மீட்டு கொடுப்போம் என்று உறுதியளித்தனர். மேலும் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை, கொள்ளையர்களைப் பிடிக்க 10 தனிப்படை அமைத்துளளது.
17 January 2021
பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளான யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தமிழகத்தில் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் தனது வலசுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி நடந்து செல்லும் யானைகள் பல்வேறு விபத்துகளில் பலியாகும் சம்பவம்
தொடர்கதையாகிறது.
குறிப்பாக, யானைகளின் வாழ்விட பரப்பு குறைவது, உணவுப் பற்றாக்குறை, நீர் மாசு, பூச்சிக்கொல்லிகள், சட்டவிரோத மின் வேலிகள், வேட்டை, ரயில் மற்றும் வாகன விபத்துகள், விவசாய பயிர்களை காக்க விவசாயிகள் கையாளும் தவறான உத்திகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பு
அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் கோவையில் மின் வேலியில் சிக்கி ஒருயானை உயிரிழந்த நிலையில்,17-01-21. இன்று கொள்கலன் பார ஊர்தி மோதி மற்றொரு யானை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை சுற்றித் திரிந்து வந்ததாக வனத்துறையினருக்கு
தகவல் வந்துள்ளனர்.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த யானையை உடனடியாக காட்டுக்கள் அனுப்பும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டதனால் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் பேரண்டப்பள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல முயன்றது.
அப்போது, பெங்களூரு நகரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி அதிகவேகத்தில் வந்துக் கொண்டிருந்த கொள்கலன் பார ஊர்தி யானையின் மீது பலமாக மோதியது. இதில் யானை சம்பவ இடத்திலே யானை படுகாயமடைந்த நிலையில் சாலையில் விழுந்தது.
இதனையடுத்து தகவலறிந்து வந்த வன விலங்குகள் மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான கால்நடை மருத்துவக் குழுவினர், காயம டைந்த யானைக்கு முதல்கட்ட சிகிச்சை அளித்தனர். பின்னர், மாவட்ட வன அலுவலர் பிரபு ஆலோசனையின் பேரில் வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், படுகாயமடைந்த யானையை மீட்டு அய்யூர் காப்புக்காட்டுக்கு சிகிச்சை
அளிக்க கொண்டு சென்றனர்.
அங்கு யானையை பரிசோதித்த மருத்துவர்கள், “யானையின் பின்பக்க வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது; இதனால், யானையால் எழுந்து நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறது. கால் எலும்பு முறிவை சரி செய்வதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்”
என்றார்.
இதனிடையே யானை மோதிய கன்டெய்னர் லாரியின் ஓட்டுநரும் படுகாயமடைந்துள்ளதால், அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்ட ஆண் யானை தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. யானை உயிரிழந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில்பள்ளிகள் திறப்பு சுகாதாரத்துறை தயார் நிலையில்
தமிழகத்தில் நாளை மறுநாள் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று மொத்தம் 11 ஆயிரத்து 600 பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பயிலும் 18லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு
வர உள்ளனர்.
அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமாக மல்டி வைட்டமின், ஜிங்க் மாத்திரைகளை சுகாதாரத்துறையினர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் நாளை மறுநாள் மாணவர்களுக்கு வழங்க வைட்டமின் மாத்திரைகளை தயார் படுத்தி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.
இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 92 லட்சத்து 130 வைட்டமின் மாத்திரைகளும், ஒரு கோடியே 92 லட்சத்து 130 ஜிங்க் மாத்திரைகளும் என மொத்தம் 3.84 கோடி மாத்திரைகள் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளன.
07 January 2021
இலங்கைக்கு கொவிட் மருந்துடன் வருகை தரும் புதிய அனுமார்?
கொவிட் மருந்து விநியோகத்திலாவது சீனாவை முந்திக்கொள்ள இந்திய முற்பட்டுள்ளது.
ஏற்கனவே பீசிஆர் முதல் மாஸ்க் வரை சீனா இலங்கையில் கடை விரித்துள்ள நிiலையில் இந்தியா கொவிட் மருந்துடன் களமிறங்குகின்றது
கொவிட் நோய்த் தொற்றுக்கு
சிகிச்சையளிக்கும் வகையில், இந்தியாவால் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை ஏனைய
நாடுகளுக்கு வழங்கும் போது, இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதற்கு இந்தியா தயார் என, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில், இன்று காலை சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்துரைத்த ஜனாதிபதி, இந்தியாவால் உற்பத்தி செய்யப்படுகின்ற கொவிட்-19 தடுப்பூசியை, தேவைக்கேற்ப சரியான மதிப்பீட்டுக்குப் பின்னர் கொள்வனவு செய்வதற்கு, இலங்கை
விரும்புகின்றது என்றார்.
ஏனைய நாடுகளுக்குத் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யும் போது, இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென ஜெய்ஷங்கர்
தெரிவித்துள்ளார்.
05 January 2021
சைக்கிளில் வந்த கொரோனா தடுப்பு மருந்து. பெரும் அதிர்ச்சியில் அதிகாரிகள்
இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா
தடுப்பு மருந்து போடுவதற்கான ஒத்திகை
நடைபெற்று வருகிறது.
அதில், உத்திரப் பிரதேச மாநிலம், பிரதமரின் வாரணாசி
தொகுதியில் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து சைக்கிளில் எடுத்து வரப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக உ.பி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.உ.பியில் பல்வேறு இடங்களில் சமீபத்தில் கொரோனா
தடுப்பு மருந்து ஒத்திகை நடைபெற்றது.
அதில், வாரணாசியில் உள்ள பெண்கள் மருத்துவமனை ஒன்றிற்கு ஒத்திகைக்காக கொரோனா தடுப்பு மருந்து சைக்கிளில்
எடுத்து வரப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)