கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முத்தூட் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த ரூ7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள பத்து தனிப்படைகள் அமைத்துள்ளது காவல்துறை.
ஓசூரில் உள்ள முத்தூட் என்ற தனியார் நகை அடகு வைக்கும் அலுவலகத்தில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் அமைந்துள்ள முத்தூட் தனியார் நகை அடகு வைக்கும் நிறுவனம், எப்பொழுதும்போல் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் காலை வழக்கம்போல்
வந்திருக்கின்றனர்.
அப்போது பின்பக்கத்திலிருந்து வந்த மர்ம நபர்கள் 6 பேர் கொண்ட கும்பல், அலுவலகத்தின் மேலாளர் உட்பட 6 ஊழியர்களை கட்டிப்போட்டு, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பாதுகாப்புப் பெட்டகத்தின் சாவியை வாங்கி, அதில் வைக்கப்பட்டிருந்த 25,091 கிராம் தங்க நகைகளையும், 96 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த நகர காவல்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், அருகிலுள்ள 'மறைகாணி' காட்சிகளையும் அவர்கள் ஆய்வு
செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், பகல்நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மிரட்டிய கும்பல் துப்பாக்கி முனையில் சாவியைப் பெற்று கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தங்க நகைகளை அடகு வைத்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், கொரோனா காலத்தில் எங்களுக்கு வேலை இல்லாததால் தான், குடும்பத்தை நடத்த வேறு வழியின்றி தங்கத்தை அடகு வைத்தோம். இன்று அந்த நகை கொள்ளையடிக்கப்பட்டது என்று
கேள்விப்பட்டவுடன், இனி அந்த நகைகள் மீட்கவே முடியாதா என கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
பின்பு காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி கண்டிப்பாக உங்களுடைய நகைகளை மீட்டு கொடுப்போம் என்று உறுதியளித்தனர். மேலும் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை, கொள்ளையர்களைப் பிடிக்க 10 தனிப்படை அமைத்துளளது.
0 கருத்துகள்:
Post a Comment